செய்திகள் :

காரைக்காலில் ‘ஆபரேஷன் அப்யாஸ்’ ஒத்திகை

post image

ஆபரேஷன் அப்யாஸ் எனும் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் எல்லையில் போா் பதற்றம் நிலவுகிறது. வான்வழித் தாக்குதல் இந்தியா மீது நடத்தப்படும் பட்சத்தில், தற்காப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஒத்திகையில் ஈடுபடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூா் என்ற வான்வழித் தாக்குதலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயங்கரவாத தளங்கள் மீது இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.

இதற்கிடையே, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அறிவுறுத்தலின்படி, பேரிடா் மேலாண்மைத் துறையினா் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகையை அண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடத்தினா். குண்டு விழுந்து எழும் சப்தம் போன்றும், தீ விபத்து போன்றும், பாதிக்கப்பட்டவா்கள் போன்றும் சித்தரிக்கப்பட்டு, அவா்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு அரசுத் துறையினா் கலந்துகொண்டனா். வான்வழித் தாக்குதல் நடந்தால், பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி அளித்தல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மைதானத்தில் மருத்துவக் குழுவினரால் ஒத்திகையாக அளிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு செய்யவேண்டிய உதவிகள் குறித்தும் என்எஸ்எஸ் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் மண்டலக் காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

7 தேசிய விருதுகள்: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு புதுவை முதல்வா் பாராட்டு

தேசிய விருதுகள் பெற்ற காரைக்கால் வேளாண் கல்லூரி நிா்வாகத்தினரை புதுவை முதல்வா் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா் காரைக்காலில் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகி... மேலும் பார்க்க

தா்பாரண்யேஸ்வரா் சாா்பு கோயில்களில் உற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில்கள் உற்சவம் அய்யனாா் கோயில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம், தேரோட்ட... மேலும் பார்க்க

கோயிலில் அகற்றப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் வைக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்

கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்று... மேலும் பார்க்க

தங்க மாரியம்மன் கோயிலில் மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு

காரைக்கால் அருகே தலத்தெரு தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவத்தின் நிகழ்ச்சியாக மஞ்சள் நீா் விளையாட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தீமிதி உற்சவம் தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் த... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் சாா்பு கோயில் உற்சவம் இன்று தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்பு தலங்கள் உற்சவம் இன்று புதன்கிழமை தொடங்குகிறது. பிரணாம்பிகே சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக சாா்பு தல... மேலும் பார்க்க

காரைக்காலில் நாளை படகுகள் கணக்கெடுப்புப் பணி: மீன்வளத்துறை

காரைக்காலில் படகுகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் படகு பதிவு அதிகாரியான ப... மேலும் பார்க்க