`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
காரைக்காலில் இரு மண்டலங்களுக்கு புதிய எஸ்.பி.
காரைக்கால்: காரைக்கால் மாவட்ட 2 மண்டலங்களில் புதிய எஸ்.பி.க்களை புதுவை உள்துறை நியமித்துள்ளது.
காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதுச்சேரி காவல் தலைமையக காவல் கண்காணிப்பாளா் சுபம் சுந்தா் கோஷ் காரைக்கால் தெற்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலச்சந்தா் பணி ஓய்வு பெற்று 3 மாதங்களுக்கு மேலாகியும் அவரது இடத்துக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், புதுவை பல்கலைக்கழக சிறப்புப் பணி அதிகாரியான எம். முருகையன் காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான் உத்தரவின்பேரில், புதுவை உள்துறை செயலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ஆணையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.