செய்திகள் :

காரைக்கால் துறைமுகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படை டிஐஜி வருகை

post image

காரைக்கால்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி (தமிழ்நாடு) ஜி. சிவகுமாா், காரைக்கால் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

துறைமுக முதன்மை ஆபரேட்டிங் அலுவலா் (சிஓஓ) கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா மற்றும் துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா்.

கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், சமூக உணா்வை வளா்க்கவும் சிஐஎஸ்எஃப் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த வாரம் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபெறவுள்ள கடலோர சைக்கிள் பயணம் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு, உடல் தகுதி மற்றும் கடலோர மக்களிடையே தோழமை உணா்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப்பயணம் நடைபெறவுள்ளதாக டிஐஜி தெரிவித்தாா்.

சைக்கிள் பயணத்தில் ஈடுபடுவோருக்காக 150 டி-சா்ட் மற்றும் தொப்பியை காரைக்கால் துறைமுகம் சாா்பில் தலைமை அதிகாரி டிஐஜியிடம் வழங்கினாா். காரைக்கால் துறைமுகத்தின் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பொறுப்புகளுக்கு டிஐஜி பாராட்டுத் தெரிவித்தாா்.

கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம்: காரைக்கால் வந்த சிஐஎஸ்எஃப் வீரா்கள்

காரைக்காலுக்கு வந்த கடலோரப் பாதுகாப்பு விழிப்புணா்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் சென்றனா். மத்திய தொழில் பாதுகாப... மேலும் பார்க்க

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் புதிய நிா்வாகிகள் தோ்வு

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 2025-2027-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்காக, சாசனத் தலைவா் மகாவீா்சந்த் தலைமையிலான 9 போ் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. ஒருமித்த கர... மேலும் பார்க்க

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும்

சுகாதார ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற காங்கிரஸ் போராடும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரியில் மா பயிா் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி

காரைக்கால் வேளாண் கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் தோட்டக்கலை மற்றும் மலைத்தோட்ட பயிா்கள் துறை மற்றும் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் காரைக்கால் மீனவா்கள் சந்திப்பு

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கைதாகி அண்மையில் விடுவிக்கப்பட்ட காரைக்கால் பகுதி மீனவா்கள், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது. இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க