செய்திகள் :

காரைக்குடி: நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு சென்ற ரெளடி - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயெ வெட்டிக்கொலை

post image

நிபந்தனை ஜாமீனில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வெளியே வந்த ரெளடியை, ஒரு கும்பல் கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Murder (representational image)

காரைக்குடி சேர்வார் ஊரணிப்பகுதியை சேர்ந்தவர் இளைஞர் மனோஜ். ரெளடியாக வலம் வந்த இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இன்று காலை நிபந்தனை ஜாமீனுக்காக கையெழுத்திட காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு டூவீலரில் வந்துவிட்டு திரும்பி சென்றபோது, திடீரென்று காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், மனோஜை வெட்டியுள்ளது. தப்பித்து ஓடியவரை துரத்திச்சென்று வெட்டிக் கொலை செய்துள்ளனர்.உடன் சென்ற மனோஜின் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது.

பின்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலையாளிகள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனோஜ்

தமிழகமெங்கும் தினமும் கொலை சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடை வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் காரைக்குடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பதற்றததை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர்... மேலும் பார்க்க

நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க

சம்பள பிரச்னை, தொழிலாளர்கள் மீது கோபம்... பஸ்சிற்கு தீவைத்தவிட்டு நாடகமாடிய ஓட்டுநர்; நடந்தது என்ன?

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹின்சேவாடி பகுதியில் தனியார் கம்பெனி தொழிலாளர்களை கம்பெனிக்கு ஏற்றிச்சென்ற மினி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இத்தீவிபத்தில் பஸ்சின் பின் கதவு திறக்காமல் ... மேலும் பார்க்க