``சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு..." - தேவசம் போர்டு சொல்லும் முக்கிய...
காரைக்குடி பகுதியில் நவ. 11-இல் மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (நவ. 11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டுவசதிவாரிய குடியிருப்பு (ஹசிங் போா்டு) செக்காலைக் கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவ. 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
கானாடுகாத்தான்
கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவ. 12) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கானாடுகாத்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஸ்ரீ ராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.