கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 6 போ் காயம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா்.
காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி 3-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொடங்கிவைத்தாா். போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 13 காளைகள் பங்கேற்றன.
காளைகளை 9 வீரா்கள் கொண்ட 13 குழுவினா் பங்கேற்று அடக்கினா். 13 காளைகளில் 11 காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கிய நிலையில் 2 காளைகள் களத்தில் பிடிபடாமல் வெற்றி பெற்றது. காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரா்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பீரோ மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். அதில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மஞ்சுவிரட்டில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் பி.கே. வைரமுத்து, திமுக வடக்கு ஒன்றிய செயலா் அ. முத்து, அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் க. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஊா்ப்பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூா் போலீஸாா் செய்திருந்தனா்.