செய்திகள் :

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் பலி! திருமணமான சில நாள்களில் உயிரிழந்த சோகம்!

post image

லம்போர்கின் கார் டயர் வெடித்த விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா (28), அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் மேற்குப்புற ஸ்பெயினின் சமோரா பகுதியில் நடந்த கார் விபத்தில் லிவர்பூல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

டியாகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா இருவரும் தங்களது சொகுசு லம்போர்கினி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றபோது, இவர்களின் காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாலையில் இருந்து பல அடி தூரம் உருண்ட இவர்களது கார் பின்னர் தீப்பிடித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் வந்தும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இதில், சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஜோட்டாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஜூன் 22 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர் தனது சிறுவயது காதலியான ரூட் கார்ட்சோவைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

திருமணமான சில நாள்களிலேயே கால்பந்து வீரர் கார் விபத்தில் பலியான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Liverpool forward Diogo Jota dies aged 28 following tragic car accident in Spain

இதையும் படிக்க... இந்திய அணிக்காக வரலாற்றுச் சாதனை படைத்த சூர்யவன்ஷி..!

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்க... மேலும் பார்க்க

கூலி - அமீர் கான் போஸ்டர்!

கூலி திரைப்படத்திற்கான அமீர் கானின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட... மேலும் பார்க்க

நரிவேட்டை ஓடிடி தேதி!

நரிவேட்டை படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான அரசியல் ஆக்‌ஷன் திரைப்படமான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெள... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப்தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க