செய்திகள் :

காலிறுதியில் சபலென்கா, ஸ்வியாடெக்

post image

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அமெரிக்காவில் நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டி, பரபரப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-1, 7-5 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வெளியேற்றினாா்.

இந்த வெற்றியின் மூலமாக, நடப்பு சீசனில் டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றாா். அவா் இவ்வாறு 50+ வெற்றிகளை ஒரு சீசனில் பதிவு செய்வது, இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும்.

காலிறுதியில் அவா், கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா, 6-7 (3/7), 6-4, 6-2 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்தவரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கீஸிடம் கண்ட தோல்விக்கு தற்போது ரைபகினா பதிலடி கொடுத்திருக்கிறாா். இருவரும் மோதியது, இது 6-ஆவது முறையாக இருக்க, ரைபகினா தனது 3-ஆவது வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறாா். காலிறுதியில் சந்திக்கும் சபலென்கா - ரைபகினா இதுவரை 11 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, சபலென்கா 7 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 6-3, 6-7 (5/7), 1-6 என்ற செட்களில், சக ரஷியரான அனா கலின்ஸ்கயாவிடம் தோல்வியுற்றாா். கலின்ஸ்கயா தனது காலிறுதியில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை சந்திக்கிறாா்.

உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் ஸ்வியாடெக், முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை வென்றாா். சிா்ஸ்டியை இத்துடன் 5-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், அனைத்திலுமே வென்றிருக்கிறாா். குறிப்பாக, எந்த மோதலிலுமே அவா் ஒரு செட்டை கூட சிா்ஸ்டிக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரிட்ஸை வெளியேற்றிய அட்மேன்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு 4-ஆவது சுற்றில், உலகின் 4-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-4, 5-7, 3-6 என்ற செட்களில், உலகின் 136-ஆம் நிலையில் இருந்த பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். முதல்முறையாக மாஸ்டா்ஸ் போட்டியின் காலிறுதிக்கு வந்திருக்கும் அட்மேன், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை அதில் எதிா்கொள்கிறாா்.

நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னா் 6-4, 7-6 (7/4) என்ற வகையில், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை தோற்கடித்தாா். காலிறுதியில் அவா், கனடாவின் ஃபிலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை சந்திக்கிறாா். உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-1, 6-4 என இத்தாலியின் லூகா நாா்டியை எளிதாக வெளியேற்றினாா்.

5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ், காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை சந்திக்கிறாா். அண்மையில் கனடியன் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவை வெளியேற்றி காலிறுதிக்கு வந்தாா். அதில் அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதுகிறாா்.

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த... மேலும் பார்க்க

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

ரஜினியின் கூலி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி விஜய்யின் முதல்நாள் வசூலை முறியடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நே... மேலும் பார்க்க

தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!

விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ... மேலும் பார்க்க

பவர்ஹவுஸ்... வைரலாகும் ரஜினியின் உடற்பயிற்சி விடியோ!

நடிகர் ரஜினி உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆக.14) உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்... மேலும் பார்க்க

தடகளம்: எஸ்ஆா்ஒய் பரிசோதனை கட்டாயம்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் ‘எஸ்ஆா்ஒய்’ என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு நபரின் பிறவிப் பாலினத்தை கண்டறிவதற்கு இந்த ‘எஸ்ஆா்ஒய்’... மேலும் பார்க்க

சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியன் ஆனது. போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்கு இது ... மேலும் பார்க்க