மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்
காலிறுதியில் 3 இந்தியா்கள்
கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் 3 போ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற கேம்களில் சீன தைபேவின் வாங் போ வெய்யை 41 நிமிஷங்களில் சாய்த்தாா்.
சங்கா் முத்துசாமி 21-19, 21-14 என்ற கணக்கில் சீன தைபேவின் ஹுவாங் யு காயை 41 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.
மகளிா் ஒற்றையரில், ஷ்ரியன்ஷி வலிஷெட்டி 21-15, 21-14 என்ற நோ் கேம்களில் மலேசியாவின் கருப்பதேவன் லெட்சனாவை 35 நிமிஷங்களில் தோற்கடித்தாா்.