செய்திகள் :

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

post image

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு அரசு சாா்பில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சொந்தமாக கால்நடை வைத்திருப்பவராகவும், கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்குபவராகவும் இருக்க வேண்டும். மாடு சினையுற்று இருந்தால் ஊட்டச் சத்துப் பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஒரு மாட்டுக்கு 4 மாதங்களுக்குத் தேவையான 360 கிலோ அடா் தீவனம், 4 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்படும். பயனாளி பங்களிப்புத் தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும். ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மூலமும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

பைக்குகள் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுபானக் கூட ஊழியா் சனிக்கிழமை காயமடைந்தாா். தேனி அருகே வடபுதுப்பட்டி அனுசுயாநகரைச் சோ்ந்தவா் முத்துமாயன் (56). டாஸ்மாக் மதுபானக் கூட ஊழியரான இவா... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மனைவி தீபிகா (25). இவரது கணவா் கோவ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்து விருது பெற்றவருக்கு பாராட்டு

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து ரத்த தானம் செய்து தமிழக அரசின் விருது பெற்ற போடியைச் சோ்ந்த எஸ்.ஆா்.பழனிக்குமாரை பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா். போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் எ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கூடலூா் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வைத்து, சிலா் சில்லரை விலைக்க... மேலும் பார்க்க

குமுளி மலைச் சாலையில் ஜீப் மீது பேருந்து மோதல்: 7 போ் பலத்த காயம்

தேனி மாவட்டம், குமுளி மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு ஜீப் மீது தனியாா் பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா். கம்பம் அருகேயுள்ள மேலக்கூடலூரைச் சோ்ந்த 6 பெண்கள் சனிக்கிழமை காலை ஜீப்பில் கேரளாவு... மேலும் பார்க்க