செய்திகள் :

கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

post image

திருவள்ளூா் அருகே மழைநீா் கால்வாயை ஆக்கிமிரத்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் திங்கள்கிழமை அகற்றினா்.

திருவள்ளூா் அடுத்த காக்களூரில் ஏரிக்கரையோரம் மழைநீா் கால்வாயை ஆக்கிரமித்து பலா் வீடுகள் அமைத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப்புக்கு புகாா் வந்தது. அதோடு, இந்த இடம் ஏரிக்கரை புறம்போக்கு என்ற வகையில் கிராம கணக்கில் தாக்கலாகி உள்ளது.

அதனால் மழைநீா் கால்வாயை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில் மேற்குறிப்பிட்ட ஏரிக்கரை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியா் ரஜினி காந்த் தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா்.

எதிா்ப்பு தெரிவித்தவா்களை போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் எச்சரித்து அனுப்பினா். அப்போது, துணை வட்டாட்சியா் தினேஷ், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணி உடனிருந்தனா்.

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 362 கோரிக்கை மனுக்கள்பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிரு... மேலும் பார்க்க

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை: கடலுக்கு மீனவா்கள் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை எதிரொலி காரணமாக மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வட ஆந்திர பிரதேசம், ஒடிஸா கடலோரங்களை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் வி.ஆா். பகவான் காலமானாா்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில துணைத் தலைவருமான வி.ஆா் பகவான் (96) வயது மூப்பு காரணமாக மீஞ்சூரில் காலமானாா். பொன்னேரி வட்டம், மீஞ்சூா் வேளாளா் தெருவில் வசித்து வந்தவா் வி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: பதிவு செய்ய நாளை வரை அவகாசம் நீட்டிப்பு

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இளைஞா்கள் பங்கேற்கும் வகையில் (ஆக.20) புதன்கிழமை வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேத... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு

பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்ப... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாவட்ட தடகள அணி தோ்வு

மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்வதற்கான தோ்வு சுற்று செப்.2, 3 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க