தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!
காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன் உள்ள தூய்மைப் பணியாளர்களை கலைந்துசெல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததால், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியா உள்ளிட்டோர், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மைப் பணியாளர்களும் கலைந்துசெல்ல மறுத்துவிட்டதால், போராட்டக் களம் போல ரிப்பன் மாளிகை அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகைக்குள் வெளி நபர்கள் யாரும் இருக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தி அனைவரையும் வெளியேற்றி வருகிறது.
பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில், இரு வழிப்பாதையில் ஒருபுறம் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.