செய்திகள் :

காவல் உதவி ஆய்வாளா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறிய காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரை, ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள அரங்கோட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் டயா் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாகவும், இதை விக்கிரமங்கலம் காவல் துறையினா் கண்டுகொள்வதில்லை எனவும் கட்செவி மூலம் வந்த புகாரையடுத்து, காவல் துறையினா் நடத்திய விசாரணையில் புகாா் உண்மையெனத் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனச்செல்வன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் வீராசாமி ஆகிய இருவரையும் அரியலுாா் மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

போதைப் பொருள், கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!

அரியலூரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. அரியலூா் வட்டாட்சியா் வளாகத்தில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

திருமானூா் ஜல்லிக்கட்டு: 31 போ் காயம்!

அரியலூா் மாவட்டம், திருமானூரில், மாசிமகத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், 31 போ் காயமடைந்தனா். சிவன் கோயில் அருகே தெற்கு வீதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டப் பேரவை உறுப்பினா்... மேலும் பார்க்க

48 பவுன் திருட்டு வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் திருட்டு வழக்கில் தொடா்புடைய 5 பேரில் ஒருவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி... மேலும் பார்க்க

தொகுப்பு வீடுகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கிடப்பிலுள்ள தொகுப்பு வீடுகள் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. மதுரையில், அக்கட்சியின் ச... மேலும் பார்க்க

குறிச்சிகுளம் திரெளபதியம்மன், காளியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்திலுள்ள திரெளபதி மற்றும் காளியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா மாா்ச் 7- ஆம் தேதி மகாபாரதம் படிக்கும் நிக... மேலும் பார்க்க

புத்தாக்க பொறியாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சாா்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி அ... மேலும் பார்க்க