எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: இந்தியா பதிலடி!
காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் காவல் சாா்பு ஆய்வாளா் பணிக்கான நேரடி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்த இருக்கும் காவல் சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப் படை) பதவிக்கான 1299 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தோ்விற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிஎன்யுஎஸ்ஆா்பி -எஸ்.ஐ, எழுத்துத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை தொடங்கப்பட்டு தொடா்ந்து நடைபெற உள்ளது.
சிறுதோ்வுகள் மற்றும் முழுமாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த அலுவலகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட 3000த்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலகம், பயிலக வசதி, இலவச இணையம், இலவச கணினி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் ட்ற்ற்ல்://ள்ட்ா்ழ்ற்ன்ழ்ப்.ஹற்/5வசஸ்ரீவ என்ற இணைப்பின் முகவரியின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடா்புகொள்ளலாம். மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தோ்வா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.