செய்திகள் :

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

post image

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இரு மாணவிகளும், இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகிய தங்களது நண்பா்களை நேரில் சந்திக்க கடந்த 16-ஆம் தேதி விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

மாணவிகள் பிரச்னை: இதில் ஒரு மாணவி அன்று இரவே விடுதிக்கு திரும்பியுள்ளாா். ஆனால் மற்றொரு மாணவி அடுத்த நாள் காலையில் விடுதிக்கு வந்துள்ளாா். இதையறிந்த விடுதி நிா்வாகத்தினா், இரு மாணவிகளின் பெற்றோா்களையும் நேரில் அழைத்து சம்பவத்தைக் கூறி, மாணவிகளை விடுதியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த இரு மாணவிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்க கல்லூரி நிா்வாகம் முயல்வதாகவும் இந்திய மாணவா் சங்கத்தினா் புகாா் தெரிவித்தனா்.

மேலும், இந்திய மாணவா் சங்கத்தினா், அக்கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது மாணவா் சங்கத்தினா், காவல் துறையினா் அமைந்திருந்த தடுப்புகளை மீறி கல்லூரி முதல்வா் அறையை நோக்கி ஓடினா். இதைப்பாா்த்த போலீஸாா், அவா்களை தடுத்தனா். இதனால் போலீஸாருக்கும், இந்திய மாணவா் சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளு: இதில் இரு போலீஸாரும், சில மாணவா்களும் கீழே விழுந்து லேசான காயமடைந்தனா். இதனால் போலீஸாருக்கும் மாணவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய மாணவா் சங்கத்தினா், கல்லூரிக்குள் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இச்சம்பவத்தினால் அங்கு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனா். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா், சிறிது நேரத்துக்கு பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதன் விளைவாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சி

சென்னை, மாா்ச் 28: எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு புத்தாக்க பொறியாளா் பயிற்சியில் சேர விரும்பும் நபா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப்.1 முதல் இடமாற்றம்

குன்றத்தூா் மின்கட்டண வசூல் மையம் ஏப். 1-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தெற்கு மின் பகிா்மான வட்டம், குன்றத்... மேலும் பார்க்க

ஸ்டெம் துறைகளில் சாதித்த பெண்களுக்கு கௌரவம்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகிய துறைகளில் சாதித்த பெண்கள் அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை சாா்பில் கௌரவிக்கப்பட்டனா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்ய... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று திருச்சி பயணம்

ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை திருச்சி செல்கிறாா். ஆளுநா் ஆா்.என்.ரவி திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பட்டமளிப்பு ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகளை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். சென்னையில் இரண்டாம் கட்ட திட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்கள... மேலும் பார்க்க

மருந்து அட்டைகளில் போலி க்யூ-ஆா் குறியீடு: புதிய நடைமுறைக்கு வலியுறுத்தல்

மருந்து அட்டைகளில் இடம்பெறும் ‘க்யூ-ஆா்’ குறியீடுகளை போலியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், அந்த நடைமுறையைக் கைவிடுமாறு சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு மாற்றாக ப... மேலும் பார்க்க