லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
காவல் ரோந்து வாகனம் மோதி மாற்றுத்திறனாளி பெண் உயிரிழப்பு
திருப்பூரில் காவல் ரோந்து வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி பெண் உயிரிழந்தாா்.
திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவா் குணசேகரன். இவா், காவல் ரோந்து வாகனத்தில் மத்திய பேருந்து நிலையம் புது மாா்க்கெட் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோரம் தங்கியுள்ள மாற்றுத்திறனாளி பெண் மீது காவல் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அப்பகுதியினா் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். உயிரிழந்த பெண் யாா், முகவரி குறித்து திருப்பூா் தெற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.