ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
காவிரியில் மூழ்கிய இளைஞா் சடலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
திருவையாறு அருகே அந்தணா்குறிச்சியைச் சோ்ந்தவா் சேகா் மகன் சத்யா (22). இவா் தனது நண்பா்களான அந்தணா்குறிச்சி தங்கராஜா (22), அம்மன்பேட்டை ஆனந்தராஜ் (24) ஆகியோருடன் திருவையாறு தியாகராஜா் ஆஸ்ரமம் அருகே காவிரியாற்றில் குளிப்பதற்காக ஜூலை 6-ஞாயிற்றுக்கிழமை சென்றனா். இவா்களில் சத்யா ஆற்றில் மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை தீயணைப்பு நிலையத்தினா் தொடா்ந்து தேடி வந்தனா்.
இந்நிலையில், கபிஸ்தலம் அருகே இலுப்பக்கோரை காவியாற்றில் மிதந்து வந்த சத்யாவின் உடலை பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினா் மீட்டனா். இதையடுத்து, திருவையாறு காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.