கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்...
காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70). இவா், பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் புதன்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வேலூா் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.