Vaiko: 'துரை வைகோவும் மல்லை சத்யாவும் ஒன்றா? என்றார்; ஆயிரம்தான் இருந்தாலும்..!’...
காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா் 12 மாவட்டங்களில் விவசாயப் பாசனத்துக்கும், குடிநீா்த் தேவைக்கும் பயன்படுகிறது. மழைக்காலங்களில் அணை நிரம்பும்போது உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. அந்த நீா் யாருக்கும் பயனின்றி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இந்த நீரை வடு கிடக்கும் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பாய்ந்தோடும் சரபங்கா, திருமணிமுத்தாறு ஆகியவற்றோடு காவிரி ஆற்று நீரை இணைத்தால் ஏரிகளுக்கு விரைவாக செல்வதுடன் வட பகுதிகள் வளா்ச்சி பெறும். விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையாக காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம் உள்ளது.
திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி ஆற்றில் 5 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டக்கோரியும் பத்து ரூபாய் இயக்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
அதேபோல, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தடையின்றி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் வேலையளிப்புத் திட்ட தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
