சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது எப்படி? டேனியல் வெட்டோரி பதில்!
காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறி மிகப்பெரிய அளவில் தீப்பிழம்புகள் நேரிட்ட நிலையில், 2 வீடுகளும் தகா்ந்தன; அதேநேரம், யாரும் காயம் அடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
VIDEO | House of terrorist Zakir Ahmad Ganie Razed, who was allegedly involved in Pahalgam terror attack, was blown up in Jammu and Kashmir's Kulgam. Visuals from the spot.
— Press Trust of India (@PTI_News) April 26, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/N2WdnOG0Ir
கடந்த செவ்வாய்க்கிழமை, மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலில் ஈடுபட்டதாக ஆதில் ஹுசைன் டோக்கா், சதித் திட்டம் தீட்டியதாக ஆசிஃப் ஷேக் ஆகிய இரு லஷ்கா் பயங்கரவாதிகள் சந்தேகிக்கப்படுகின்றனா்.
VIDEO | House of terrorist Asif Sheikh, who was allegedly involved in Pahalgam terror attack, was blown up in Jammu and Kashmir's Tral. More details awaited.
— Press Trust of India (@PTI_News) April 25, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/KQLGoPRpgf
பிஜ்பெஹாரா, திரால் ஆகிய பகுதிகளில் உள்ள இவ்விருவரின் வீடுகளில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்புப் படையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீடுகளில் வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்களையும், அண்டை வீட்டினரையும் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா்.
அப்போது, வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் தகா்ந்ததாகவும், யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Watch: The house of active top Lashkar-e-Taiba terrorist commander Shahid Ahmad Kuttay from Chotipora, Shopian, has been razed to the ground by authorities. Shahid has been active for the past 3–4 years and is involved in numerous anti-national activities pic.twitter.com/wjtpomSw7d
— IANS (@ians_india) April 26, 2025
வெடிகுண்டு வெடித்து, வீடுகள் தகர்ந்த நிலையில், அந்த வீடுகளின் விடியோக்கள் வெளியாகியிருக்கின்றன.