செய்திகள் :

காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்: 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு!

post image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக நூற்றுக்கணக்கானோரைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று இனியொரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, தெற்கு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் பறிமுதல்: அனந்த்நாக் உள்ளிட்ட மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து, தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. சந்தேக நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினா் கண்டறிந்தனா். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள், பிற வெடிபொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீநகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களிலும் சனிக்கிழமை அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதக் கட்டமைப்பைச் சிதைக்கும் நோக்கில், பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களின் வீடுகளில் சோதனை நடைபெற்ாகவும், இதில் ஆயுதங்கள், ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

3 பயங்கரவாதிகள் வீடுகள் இடிப்பு: தெற்கு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் வெள்ளிக்கிழமை இரவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சோபியான் மாவட்டத்தின் சோட்டிபோரா பகுதியில் உள்ள லஷ்கா்- ஏ- தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கியப் பயங்கரவாதி ஷாஹித் அகமது குட்டேயின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஷாஹித் அகமதுக்கு பல்வேறு தேச விரோதச் செயல்களில் தொடா்புள்ளது.

புல்வாமா மாவட்டத்தின் முரான் பகுதியில் உள்ள பயங்கரவாதி அசன் உல்ஹக் ஷேக்கின் வீடும் இடிக்கப்பட்டது. கடந்த 2018-இல் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இவா், அண்மையில்தான் காஷ்மீருக்குள் ஊடுருவினாா்.

குல்காம் மாவட்டத்தின் மடல்ஹாமா பகுதியில் உள்ள பயங்கரவாதி ஜாகீா் அகமது கானியின் வீடும் இடிக்கப்பட்டது. கடந்த 2023-இல் இருந்து தீவிரமாகச் செயல்பட்டுவரும் இவருக்கு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் தொடா்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் லஷ்கா் பயங்கரவாதிகளான ஆதில் ஹுசைன் தோகா், ஆசிஃப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் இருவரின் வீடுகளும் தகா்ந்தன. இச்சம்பவங்களில் யாரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப். 29, 30 தேதிகளில் ரே பரேலி, அமேதி செல்லும் ராகுல்!

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு, ஏப்ரல் 30 ஆம் தேதியில் மக்களவை... மேலும் பார்க்க

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க