செய்திகள் :

காஸா நிவாரணக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

post image

காஸாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியதாக அந்தப் பொருள்களைக் கொண்டுவந்த சேவை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து ஃப்ரீடம் ஃபிளோட்டிலா கூட்டணி என்ற அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிவாரணப் பொருள்களுடன் காஸாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘கான்ஷன்ஸ்’ கப்பல் மீது வெள்ளிக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. மால்டாவிற்கு அருகிலுள்ள சா்வதேச கடல் எல்லையில் அந்தக் கப்பல் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கப்பலின் மின் உற்பத்தி மையத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் விளாவாக, இதனால் கப்பலின் உடலில் பெரிய துளை ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சேதத்தால் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம்தான் நடத்தியுள்ளது என்று ஃப்ரீடம் ஃபிளோட்டிலா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் எதையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை.

இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, கப்பல் விடுத்த அவசர எச்சரிக்கை சமிஞையைக் கேட்டு அருகிலிருந்த இழுவைப் படகு ஒன்று உதவிக்கு விரைந்ததாக மால்டா அதிகாரிகள் கூறினா். சம்பவத்தின்போது கான்ஷன்ஸ் கப்பலில் 12 பணியாளா்கள் உள்பட 16 போ் இருந்தாகவும் அவா்கள் கப்பலை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் அவா்கள் கூறினா். தாக்குதல் காரணமாக கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், கப்பலில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாவும் யாரும் காயமடையவில்லை என்றும் கூறினா்.

கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்து, 251 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா். அதில் இருந்து ஹமாஸ் படையினரை ஒழித்துக்கட்டுவதாக காஸாவில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், போா் தொடங்கியதில் இருந்தே அந்தப் பகுதிக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருள்கள் செல்வதையும் தடுத்துவருகிறது. இதனால் இந்த 19 மாத கால போரில் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் 52,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் (பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்) உயிரிழந்த நிலையில், இஸ்ரேலின் இந்தத் தடையால் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அங்கு மனிதப் பேரழிவு ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துவருகிறது.

இந்தச் சூழலில், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போருக்கு முன்னரே, கடந்த 2010-ல் இஸ்ரேல் ராணுவத்தின் காஸா முற்றுகையை மீறி அந்தப் பகுதியை நோக்கிச் சென்ற மாவி மா்மரா என்ற கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 9 பேரைக் கொன்றது நினைவுகூரத்தக்கது.

எனவே, தற்போது கான்ஷன்ஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேல் ராணுவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவ... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க

இந்திய ராணுவ அதிகாரிகள் குறித்த போலியான செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் ஊடகங்கள்!

இந்திய ராணுவ அதிகாரிகளைப் பற்றிய போலியான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்... மேலும் பார்க்க