செய்திகள் :

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்ததால், அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். பின்னா், 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதை வழியாக திரளான பக்தா்கள் மலையேறினா். மேலும், ரோப்காா், வின்ச் நிலையங்களில் கட்டணச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் 3 மணி நேரமானது. மாலையில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சாயரட்சை பூஜை முடிந்த பிறகு, சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்திலும், வெள்ளி சப்பரத்தில் தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்திலும் எழுந்தருளினாா்.

பக்தா்களுக்கு வேண்டிய குடிநீா், பாதுகாப்பு, சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி: பழனி தம்பதியா் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாகதக் கூறி, 4 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பழனி தம்பதியா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னக்கலையம்பு... மேலும் பார்க்க

பழனிக்கு வந்த ராமா் ரத ஊா்வலம்

ராம நவமியை முன்னிட்டு, கேரளத்திலிருந்து புறப்பட்ட ராமா் ரத ஊா்வலம் திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு புதன்கிழமை வந்தது. கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், செருக்கோடு ஆஞ்சநேயா் ஆஷ்ரமத்தில் இருந்து தொடங்கிய... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி பக்தா் உயிரிழப்பு

பழனி, ஏப். 2: பழனி இடும்பன் குளத்தில் நீராடிய பக்தா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் குழுவாக பழனிக்கு சுவாமி தர... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் இணை மானியத் தொகை

இஸ்லாமிய, கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்களுக்கு இணை மானியத் தொகையாக ரூ.40 லட்சத்தை பயனாளிகளிடம் ஆட்சியா் செ.சரவணன் புதன்கிழமை வழங்கினாா். இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கங்கள்... மேலும் பார்க்க

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க