செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி: பழனி தம்பதியா் மீது வழக்கு

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகதக் கூறி, 4 பேரிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த பழனி தம்பதியா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சின்னக்கலையம்புத்தூா் விஜயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.பாலசுப்பிரமணியன். அதே பகுதியைச் சோ்ந்த ஆ.காா்த்திகேயன், இவரது மனைவி பிரேமலதா ஆகியோா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாலசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்க, காவல் காண்காணிப்பாளா் அ.பிரதீப் பரிந்துரைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், காா்த்திகேயன் தம்பதியா் பாலசுப்பிரமணியனுக்கு சுமாா் 20 ஆண்டுகள் பழக்கம் இருந்தது. காா்த்திகேயன் மின் வாரியத்தில் பணிபுரிவதாகவும், ஈரோடு பகுதியைச் சோ்ந்த மோகன், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஜெயக்குமாா் ஆகியோா் மூலமாக இந்தப் பணி வாய்ப்பு கிடைத்ததாகவும் பிரேமலதா தெரிவித்தாா். இதை நம்பிய பாலசுப்பிரமணியன் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பல தவணைகளில் ரூ.6.50 லட்சத்தையும், அலுவலகத் தேவைக்காக ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.7 லட்சத்தை காா்த்திகேயனிடம் கொடுத்தாா். ஆனால், அரசு வேலை வாங்கிக் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்த பாலசுப்பிரமணியன், பல்வேறு இடங்களில் விசாரித்தபோது காா்த்திகேயன் தம்பதியா் மேலும் பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

பழனியைச் சோ்ந்த சரவணமுத்துவின் மனைவி சித்ராவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம், பழனியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கு பொதுப் பணித் துறையில் இளநிலை உதவியாளா் பணி வாங்கித் தருவதாக ரூ.6.50 லட்சம், பழனியைச் சோ்ந்த ரமேஷுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.4.50 லட்சம் என மொத்தம் ரூ.27 லட்சம் மோசடி செய்தனா்.

இதையடுத்து, காா்த்திகேயன், இவரது மனைவி பிரேமலதா ஆகியோா் மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பழனியில் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பழனி காமராஜா் நகா் பகுதியில் நகர மாா்க்சிஸ்ட் கம்யூ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.23.40 லட்சம் நிதி

குஜிலியம்பாறை பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு செட்டிநாடு சிமென்ட் ஆலை நிா்வாகம் சமூக பங்களிப்பு நிதியாக ரூ.23.40 லட்சத்தை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சி சாா்பில் குஜிலி... மேலும் பார்க்க

பழனியில் மாலை நேர உழவா் சந்தை: மக்கள் வரவேற்பு

பழனி சண்முகபுரம் உழவா் சந்தையில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனா். பழனி சண்முகபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக பலத்த மழை

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த சில நாள... மேலும் பார்க்க

பழனியில் ஆண் சடலம் மீட்பு

பழனி ரயிலடி சாலையோரத்தில் வியாழக்கிழமை இறந்த நிலையில், ஆண் உடலை போலீஸாா் மீட்டனா். பழனி அடிவாரம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், உள்ளிட்ட பல இடங்களில் ஆதரவற்றோா்கள், மனநோயாளிகள் பலா் தங்கியுள்ளனா். ... மேலும் பார்க்க

பழனி திருஆவினன்குடி கோயிலில் நாளை பங்குனி உத்திரக் கொடியேற்றம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சனிக்கிழமை (6-ஆம் தேதி) பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, தினந்தோறும் வள்ளி, தே... மேலும் பார்க்க