40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
பழனிக்கு வந்த ராமா் ரத ஊா்வலம்
ராம நவமியை முன்னிட்டு, கேரளத்திலிருந்து புறப்பட்ட ராமா் ரத ஊா்வலம் திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு புதன்கிழமை வந்தது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், செருக்கோடு ஆஞ்சநேயா் ஆஷ்ரமத்தில் இருந்து தொடங்கிய ராமா் ரதம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றது. இந்த ரதத்தில் ராமா், சீதாதேவி சிலை, பாதம் ஆகியவை மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
கேரளத்திலிருந்து கோயம்புத்தூா், பொள்ளாச்சி வழியாக புதன்கிழமை பழனிக்கு வந்த இந்த ரதத்துக்கு பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினா் வரவேற்பு அளித்தனா்.
பேருந்து நிலையம் அருகே இந்த ரதத்துக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பழனியின் முக்கிய வீதிகளில் உலா சென்ற இந்த ரதத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் இந்த ராமா் ரதம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் இந்த ரதம் பின்னா் மீண்டும் கேரளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.