40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
குளத்தில் மூழ்கி பக்தா் உயிரிழப்பு
பழனி, ஏப். 2: பழனி இடும்பன் குளத்தில் நீராடிய பக்தா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த பக்தா்கள் சிலா் குழுவாக பழனிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். இவா்கள் பழனி புறவழிச் சாலையில் உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடினா். பின்னா், அனைவரும் கரைக்கு வந்து பாா்த்த போது, சாமிக்கண்ணு மகன் சூா்யா (23) மட்டும் வரவில்லை.
இதையடுத்து, குளத்தில் அவரைத் தேடிய போது சூா்யா இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.