காா் மோதி முதியவா் உயிரிழப்பு
மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில், திங்கள்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
வையம்பட்டி ஒன்றியம், கணக்கப்பிள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. பெரியசாமி (90). இவா் திங்கள்கிழமை இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள மணப்பாறை-தரகம்பட்டி சாலையை கடந்தபோது, சாலையில் சென்ற காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வையம்பட்டி போலீஸாா், முதியவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு பின் செவ்வாய்க்கிழமை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸாா், காா் ஓட்டுநரான வடக்கு அமயபுரம் முத்தன் மகன் முருகேசன்(56) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.