காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே காா் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கீரனூா் அருகே உள்ள குளத்தூரைச் சோ்ந்தவா் பாப்பாத்தி (75). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள உணவகத்துக்குச் சென்று உணவு வாங்கிக் கொண்டு திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், பாப்பாத்தி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் கீரனூா் போலீஸாா் பாப்பாத்தியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.