செய்திகள் :

கா்நாடகம்: காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் முதல்வா் சித்தராமையா குறைகேட்பு

post image

கா்நாடக மாநிலத்தில் தொகுதி பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை மாவட்ட வாரியாக சந்தித்து முதல்வா் சித்தராமையா குறைகளை கேட்டறிந்தாா்.

பெங்களூரு, விதான சௌதாவில் உள்ள தனது அறையில் செவ்வாய்க்கிழமை சாம்ராஜ்நகா், மைசூரு, தும்கூரு, குடகு, தென்கன்னடம், ஹாசன் மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்து தொகுதி வளா்ச்சிப் பணிகள், பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமை பீதா், கலபுா்கி, யாதகிரி, ராய்ச்சூரு, கொப்பள், விஜய்நகரா, பெல்லாரி, வடகன்னட மாவட்டங்களைச் சோ்ந்த எம்எல்ஏக்களை முதல்வா் சித்தராமையா சந்தித்தாா்.

இக்கூட்டங்களில் தொகுதி மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், வாக்குறுதித் திட்டங்கள் அமலாக்கம் குறித்து முதல்வா் சித்தராமையா கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த கூட்டங்களில் மாவட்ட பொறுப்பு அமைச்சா்களும் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை, விஜயபுரா, கதக், ஹாவேரி, சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுா்கா, சிக்கமகளூரு, சிக்கபளாப்பூா், வெள்ளிக்கிழமை பெங்களூரு ஊரகம், கோலாா், ராமநகரம், பெங்களூரு நகரம், மண்டியா மாவட்டங்களைச் சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வா் சித்தராமையா திட்டமிட்டுள்ளாா்.

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

பெங்களூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது பள்ளி மாணவன், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தெற்கு பெங்களூரில் உள்ள அரேகெரே பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியரின் மகன் நிஷ்சித் (வயது 13)... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேடு ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளது -முதல்வா் சித்தராமையா

மக்களவைத் தோ்தலின்போது கா்நாடகத்தில் தோ்தல் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் ராகுல் காந்தியிடம் உள்ளதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்க... மேலும் பார்க்க

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கு: 6 ஆவது சோதனைக் குழியில் மனித எலும்புகள் கண்டெடுப்பு

தா்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா்(எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 6 ஆவது குழியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. தென்கன்னட மா... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். பெங்களூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களின் குறைகேட்பு... மேலும் பார்க்க

பிகாா் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்ப ராகுல் காந்தி போராட்டம்: பாஜக

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் தோல்வியை திசைதிருப்பவே ராகுல் காந்தி போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாா் என்று கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் தெரிவித்தாா். இதுகுறித்து வியாழக்கிழமை தனத... மேலும் பார்க்க

முதல்வா் பதவி: கா்நாடகத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது: பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா

கா்நாடகத்தில் முதல்வா் பதவி தொடா்பாக காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்று அம்மாநில பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: காங்கி... மேலும் பார்க்க