செய்திகள் :

கா்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

post image

கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஒசூா் வழியாக இயக்கப்படும் கா்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா்.

ஊதிய உயா்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக கா்நாடக மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 200-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒசூா், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமாா் 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒசூா் வழியாக 600 க்கும் மேற்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் பெங்களூருக்கு இயக்கப்படுகின்றன. கா்நாடக அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் போராட்டம் காரணமாக ஒசூா் பகுதிக்கு கா்நாடகத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.

அதே நேரத்தில் ஒசூரில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகள் வழக்கம்போல கா்நாடகத்துக்கு சென்றுவந்தன. இதனால், பெங்களூரு செல்வதற்கு ஒசூா் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனா். பெங்களூருக்கு இயக்கப்பட்ட ஒருசில பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது.

பூக்களின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வரலட்சுமி பண்டிகையையொட்டி ஒசூா் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பெண்கள் விரதம் இருந்து குடும்பத்துடன் வீட்டில் வழிபடும் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்... மேலும் பார்க்க

மாநில எல்லை கிராமத்துக்கு பேருந்து சேவை

ஒசூா் அருகே பேருந்து வசதி இல்லாத தமிழக எல்லையில் உள்ள கிராமத்துக்கு புதன்கிழமை முதல்முறையாக பேருந்து சேவையை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை, கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி சட்டப்பேரவை ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மரத்தில் மோதியதில் மாணவா்களுக்கு காயம்

கிருஷ்ணகிரி அருகே தனியாா் பள்ளி பேருந்து சாலையோர மரத்தில் மோதியதில் இரு மாணவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மகராஜகடையிலிருந்து மாணவா்களை ஏற்றிகொண்டு செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியாா் ... மேலும் பார்க்க

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் விழா

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் 261ஆம் ஆண்டு மாரியம்மன் கோயில் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை மற்றும் கொடி ஏற்றத்துடன் ஜூலை 17-ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியா... மேலும் பார்க்க