செய்திகள் :

‘கிங்டம்’ திரைப்படத்தை கண்டித்து திரையரங்கை நதகவினா் முற்றுகை

post image

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவையில் உள்ள திரையரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா் கைது செய்யப்பட்டனா். இதனால், செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.

தெலுங்கு நடிகா் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கிங்டம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜூலை 31-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழா்களை கொச்சைபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகக் கூறி, நாம் தமிழா் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி, அவா்கள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டதை அறிந்த, நாம் தமிழா் கட்சியினா் மண்டலச் செயலா் அப்துல் வகாப் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திரையரங்கத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது, ஒருவா் மட்டும் திரையரங்கத்துக்குள் அத்துமீறி கையில் கொடியுடன் ஓடினாா். காவல் துறையினா் அவரை துரத்திச் சென்று பிடித்தனா். இதனையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்தைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.

இதேபோல, நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, சிங்காநல்லூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

வால்பாறையில் ஊதிய உயா்வு கேட்டு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். வால்பாறை நகராட்சியில் ஒப்பந்தம் அடிப்படையில் 55 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்

தமிழகத்தில் காவல் துறையினரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தனியாா் முதியோா் இல்ல கட்டட திறப்பு விழாவ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) தொடங்குகிறது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள 1,240 ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்துக்குள் நுழைந்து, உதவி ஆய்வாளா் அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு பணியிடை மாற்ற... மேலும் பார்க்க

சுத்தியால் தலையில் தாக்கியதில் இளைஞா் படுகாயம்

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் நண்பரின் தலையில் சுத்தியால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அங்கனாா் கவுண்டா் தெருவில் வசிப்பவா் ஆறுமுகம் (28). இவருக்கு திருமணம... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.6.72 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கோவை மாவட்டம், ஈச்சனாரி அருகே உள்ள மச்சக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராய... மேலும் பார்க்க