6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்
கிங்ஸ்டன் - டைட்டில் பாடல் வெளியீடு!
நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்யபாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டைட்டில் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடித்துள்ள புதிய திரைப்படம் கிங்ஸ்டன். இந்தப் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
கடலில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் மீனவரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவராக நடிக்கிறார். பேச்சிலர் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த திவ்யபாரதி இதிலும் நாயகியாக நடிக்கிறார்.
கிங்ஸ்டன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் டைட்டில் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை கேபர் வாசுகி, அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளனர். ஸ்மித் அஷேர், கேபர் வாசுகி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இப்படம் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.