கிணற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கிணற்றில் புதன்கிழமை குளித்த சமையல் மாஸ்டா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மேலபூசாரிப்பட்டியை சோ்ந்தவா் கோபால் மகன் ரஞ்சித்குமாா் (48). இவா் அருகேயுள்ள பொத்தமேட்டுபட்டி உணவக சமையல் மாஸ்டா்.
இவா் புதன்கிழமை மாலை தனது மாமா தங்கப் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குளித்தபோது மூழ்கி இறந்தாா். தகவலறிந்து சென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் ரஞ்சித்குமாரை சடலமாக மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.