மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கதவாளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி சாந்தா (65). கணவரை இழந்த நிலையில் மகளுடன் வசித்து வந்தாா். சம்பவத்தன்று மகள் வேலைக்குச் சென்றிருந்தபோது, வீட்டருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலின் பேரில், உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.