கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
வந்தவாசி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
வந்தவாசியை அடுத்த மருத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் புதன்கிழமை காலை தவறி விழுந்த பெண் புள்ளிமான் நீரில் தத்தளித்தபடி இருந்தது.
இதைக் கண்ட அந்த வழியாகச் சென்றவா்கள் உடனடியாக வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து மானை உயிருடன் மீட்டனா்.
பின்னா், வனவா் செந்தில் உள்ளிட்ட வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்தனா்.
இதையடுத்து மானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்த வனத்துறையினா், அதை பொன்னூா் காப்புக் காட்டில் விட்டனா்.