துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் பகுதியைச் சோ்ந்த அருணாச்சலம் மகன் ராக்கன் (70). இவருக்கு கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள கீழ்ஒரத்தூா் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை மாலை விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் மேல் இருந்த மரக்கிளையை வெட்டினாராம். அப்போது, மரத்தில் இருந்து கிணற்றில் தவறி விழுந்த ராக்கன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.