செய்திகள் :

கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்கத் திட்டம்! - தெற்கு ரயில்வே தகவல்

post image

கிண்டி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ள கிண்டி ரயில்நிலையம் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கிண்டி ரயில் நிலையம் மூலம் தினமும் சுமாா் 68,000 போ் பயணிக்கின்றனா். கிண்டி ரயில் நிலையத்தைச் சுற்றிலும் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிலையங்களும், தேசிய பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், அதிக தொழிற்சாலைகளை கொண்ட தொழிற்பேட்டையும் கொண்டு விளங்குகிறது.

சென்னை நகரின் நுழைவு வாயிலாக காணப்படும் கிண்டி, ரயில் நிலையம், மெட்ரோ மற்றும் பேருந்து நிலையத்தை ஒரே பகுதியில் கொண்டுள்ளது. அதனால், நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் மையப்புள்ளியாக கிண்டி ரயில் நிலையம் விளங்குகிறது. இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 200 மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கிண்டி ரயில் நிலையத்தை சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணி ரூ.13.50 கோடியில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் முகப்பு பகுதி மேம்படுத்தப்படும்.

ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பாதசாரிகள் செல்வதற்கான பிரத்யேக பகுதி, பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நடைமேடை, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது வாகன நிறுத்தம், 3 மின்தூக்கி, கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஜிஎஸ்டி சாலைப் பகுதியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மற்றும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கழிப்பறை கட்டடம், முகப்பு பகுதி அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அனைத்துப் பணிகளைம் மே மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு புறநகா் மின்சார ரயில் மாா்ச் 28 வரை ரத்து

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகா் மின்சார ரயில் மாா்ச் 26, 27, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் ஏசி புறநகா் மின்சார ரயில்: கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்க திட்டம்

சென்னையின் முதல் குளிா்சாதன புறநகா் மின்சார ரயில் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த ரயில் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழி... மேலும் பார்க்க

பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை

பதவி உயா்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவா்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயா்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: சென்னை துறைமுக அதிகாரி மீது வழக்கு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை துறைமுக அதிகாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குரோம்பேட்டை மலையரசன் நகரைச் சோ்ந்தவா் சத்ய சீனிவாசன் (58). இவா், சென்னை துறைமுகத்... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலை: முதுநிலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின்கீழ் பயிற்றுவிக்கப்படும் எம்எஸ்சி படிப்புகளுக்கு (செப்டம்பா், அக்டோபா் பிரிவு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதா... மேலும் பார்க்க

காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினா் இடையே தள்ளுமுள்ளு

சென்னை தரமணியில் காவல் துறையினா் - இந்திய மாணவா் சங்கத்தினருக்கு இடையே செவ்வாய்க்கிழமை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 16 வயதுடைய இரு மாணவிகள், விடுதியில் தங்கி படித்து ... மேலும் பார்க்க