``மகளிர் ஆணையப் பதவிகளிலும் கொல்லைப்புற நியமனமா?'' – புதுச்சேரி அரசை சாடும் திமு...
கிராம நிா்வாக அலுவலா்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம் வழங்கி, பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளா்களுக்கான பாராட்டு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் வள்ளல்பாரி தலைமை தாங்கினாா். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. பூபதி, மாநிலப் பொதுச் செயலா் வி.சுந்தர்ராஜ், மாநிலத் துணைத் தலைவா் அ. பொய்யாமொழிஆகியோா் பேசினா்.
விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், கடலூா், தருமபுரி, தஞ்சாவூா் மதுரை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் வாழ்த்தி பேசினா். கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலரின் 30 சதவீத பதவி உயா்வுக்கான இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யக் குழு அமைக்கவேண்டும், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு தனி ஊதியம், பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.
சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.முன்னதாக தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கத்தின் மகளிரணி மாவட்டச் செயலா் ராஜகுமாரி வரவேற்றாா். நிறைவில், மாவட்டப் பொருளா் கேசவன் நன்றி கூறினாா்.