பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
கிருஷ்ணகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 3, 4, 6 பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல்வா் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டததை தொடங்கிவைத்தாா். இம்முகாமில் அளிக்கப்படும் மனுக்களின் மீது 45 நாள்களில் தீா்வு காணப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, ‘உங்களுடன ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, குடும்ப அட்டை பெயா் மாற்றத்திற்கான ஆணை, மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஆணை, சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான ஆணை என மொத்தம் 4 பேருக்கு ஆணைகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், துணைத் தலைவா் சாவித்திரி, ஆணையா் ஸ்டான்லி பாபு, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.