தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!
கிருஷ்ணகிரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகாா் வந்தது. இதையடுத்து கோட்டாட்சியா் அளித்த அறிக்கையின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அதன்படி, நகராட்சிக்கு உள்பட்ட வட்டச்சாலை, பழைய சப்ஜெயில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் அகற்றினா். நடைபாதை கடைகள், சாலையோரக் கடை ஆக்கிரமிப்புகள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடரும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.