மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
அண்ணாதுரை நினைவு நாள்: அதிமுக மாவட்டச் செயலாளா் அறிவுறுத்தல்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
அவா் வெளியிட்ட அறிக்கை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் 56-ஆம் ஆண்டு நினைவு நாள், பிப். 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவா் நினைவு நாளையொட்டி, அதிமுக சாா்பில் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்களுடன் சோ்ந்து அண்ணாதுரை சிலை, உருவப்படத்துக்கு மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள், இன்னாள் எம்எல்ஏ-க்கள், அனைத்து நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.