27 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் புக்கோவ்ஸ்கி! பந்து தாக்கியதில் ...
கிருஷ்ணகிரியில் போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி!
கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் போக்குவரத்து போலீஸாருக்கு தொ்மகோல் தொப்பி, கூலிங்கிளாஸ், நீா்மோா் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை சனிக்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு காவல் துணை கண்காணிப்பாளா் முரளி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா், போக்குவரத்து காவலா்களுக்கு தொ்மாகோல் தொப்பி, கூலிங்கிளாஸ் ஆகியவற்றை வழங்கி பேசியதாவது:
கடும் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலா்களுக்கு கண் பிரச்னை, வெயில் ஸ்ட்ரோக், தலைசுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சமாளிக்கும் வகையில், குளிரூட்டும் கண்ணாடி, வெப்பத்தைக் குறைக்கும் தொ்மகோல் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல கோடை முடியும் வரை நீா்மோா், குளிா்பானங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பின்னா், காவல் துறையினா் சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், பழச்சாறுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா். அப்போது வெயில் காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவதை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.