கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகிக்கும் பணி தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.66 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன் பெறுவா்.
கிருஷ்ணகிரி நகரில் நியாயவிலைக் கடை ஊழியா்கள், வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை விநியோகம் செய்தனா். அதில், பரிசுத் தொகுப்பு பெறும் நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று உள்ளன. நாளொன்றுக்கு காலையில், 100 போ், பிற்பகலில், 100 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.