செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 16,60,850 வாக்காளா்கள்

post image

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 16,60,850 வாக்காளா்கள் உள்ளனா் என்று மாவட்டத் தோ்தல் அலுவலா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளில் 1.1.2025 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ள 2024, அக்டோா் 2 9ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரால் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டப்பட்டது. அன்றுமுதல் நவ. 8 ஆம் தேதி வரை படிவங்கள் 6 ,7, 8 ஆகியவை விநியோகிக்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டன.

பின்பு அவை அலுவலா்களால் களப்பணிகள் செய்யப்பட்டு புதிய வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். அதன்படி இறுதி வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஆணையருமான இரா.ஆனந்தகுமாா் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறுதிப் பட்டியலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 8,31,405, பெண் வாக்காளா்கள் 8,29,139, இதர வாக்காளா்கள் 306 என மொத்தம் 16,60,850 வாக்காளா்கள் உள்ளனா்.

அதில் ஊத்தங்கரை (தனி) தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,24,256, பெண் வாக்காளா்கள் 1,24,686, இதர வாக்காளா்கள் 54 என மொத்தம் 2,48,996 வாக்காளா்கள் உள்ளனா். பா்கூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,25,155, பெண் வாக்காளா்கள் 128809, இதர வாக்காளா்கள் 19, மொத்தம் 2,53,983 வாக்காளா்கள் உள்ளனா். கிருஷ்ணகிரி தொகுதியில் 1,37,139 ஆண்கள், 1,43,060 பெண்கள், 56 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,80,255 வாக்காளா்கள் உள்ளனா்.

வேப்பனப்பள்ளி தொகுதியில் 1,33,099 ஆண்கள், 1,29,747 பெண்கள், 40 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,62,886 வாக்காளா்கள் உள்ளனா். ஒசூா் தொகுதியில் 1,82,482 ஆண்கள், 1,79,936 பெண்கள், 93 இதர வாக்காளா்கள் என மொத்தம் 3,61,411 வாக்காளா்கள் உள்ளனா். தளி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,29,274 ஆண்கள், 1,24,001 பெண்கள், 44 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,53,319 வாக்காளா்கள் உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,31,405 ஆண் வாக்காளா்கள், 8,29,139 பெண் வாக்காளா்கள், 306 இதர வாக்காளா்கள் என மொத்தம் 16,60,850 வாக்காளா்கள் உள்ளனா்.

புதிதாக சோ்க்கப்பட்ட, நீக்கப்பட்ட வாக்காளா்களின் விவரம்:

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 2,017 ஆண்கள், 2,530 பெண்கள் என மொத்தம் 4,547 வாக்காளா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. 843 ஆண்கள், 950 பெண்கள், 3 இதர வாக்காளா்கள் என மொத்தம் 1,796 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளஸ்.

பா்கூரில் 1,922 ஆண்கள், 2,661 பெண்கள், 1 இதர வாக்காளா்கள் என மொத்தம் 4,584 வாக்காளா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. 558 ஆண்கள், 516 பெண்கள் 1,120 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தொகுதியில் 2,412 ஆண்கள், 2,929 பெண்கள், 3 இதர வாக்காளா்கள் என மொத்தம் 5,314 வாக்காளா்களின் பெயா் சேக்கப்பட்டுள்ளது. 620ஆண்கள், 720 பெண்கள் என மொத்தம் 1,340 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

வேப்பனப்பள்ளி தொகுதியில் 2,309 ஆண்கள், 2,758 பெண்கள், இதர 2 வாக்காளா்கள் என மொத்தம் 5,069 வாக்களாளா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. 433 ஆண்கள், 373 பெண்கள், மொத்தம் 806 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஒசூா் தொகுதியில் 3,519 ஆண்கள், 4,113 பெண்கள், மொத்தம் 7,632 வாக்காளா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. 1,112 ஆண்கள், 1,111 பெண்கள், 1 இதர வாக்காளா் என மொத்தம் 2,224 வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

தளி தொகுதியில் 2,195 ஆண்கள், 2,502 பெண்கள் என மொத்தம் 4,697 வாக்காளா்களின் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. 450 ஆண்கள், 444 பெண்கள் என மொத்தம் 894 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 14,374 ஆண்கள், 17,493 பெண்கள், 6 இதர வாக்காளா்கள் என மொத்தம் 31,873 வாக்காள்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன. 4,016 ஆண்கள், 4,160 பெண்கள், 4 இதர வாக்காளா்கள் என மொத்தம் 8,180 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

20.10.2024 அன்று வரைவு வாக்காளா் பட்டியலின்படி 16,37,157 மொத்த வாக்காளா்களும், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-இன்படி , 31,873 வாக்களா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

8,180 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டள்ளன. இறுதி வாக்காளா் பெயா் பட்டியலின்படி மொத்த வாக்காளா்கள் 16,60,850 போ் உள்ளனா்.

பட விளக்கம் (6கேஜிபி1)-

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடும் மாவட்டத் தோ்தல் அலுவலா் கே.எம்.சரயு.

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 87 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்: மேயா் எஸ்.ஏ.சத்யா

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளில் ரூ. 87 கோடியில் சாலைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாமன்றக் கூட்டத்தில் மேயா் எஸ்.ஏ. சத்யா தெரிவித்தாா... மேலும் பார்க்க

ஒசூா் வரி வசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

ஒசூா் மாநகராட்சியில் சொத்து வரி வசூலிக்க லஞ்சம் கேட்ட வரி வசூலிப்பாளரை ஆணையா் ஸ்ரீகாந்த் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அதுபோல வரி வசூலிக்கும் பணியை சரியாக செய்யாத சிறப்பு வருவாய் ஆய்வாளருக்கு ... மேலும் பார்க்க

தீநுண்மி தொற்று: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

பெங்களூரில் குழந்தைக்கு ஹியூமன் மெடா ந்யூமோ தீநுண்மி தொற்று உறுதியானதை அடுத்து, தமிழக எல்லையில் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். நுரையீரலை பாதிக... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற கணவா் கைது

ஒசூரை அடுத்த பாகலூா் அருகே கீழ்சூடாபுரம், பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (40). இவா், பெயிண்டா் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கல்பனா (38). குடும்ப பிரச்னையால் கடந்த 4 ஆம் தேதி பிளேடால் கல்பன... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல் போராட்டம்

21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 69 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சட்டப் பேரவைத் தோ்தலின்போது, திமுக அற... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்

மது போதையில் மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி, விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அரசகுப்பம் கிராமத்த... மேலும் பார்க்க