டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு!
கிருஷ்ணராயபுரத்தில் ரூ.92 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்!
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.92.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தாந்தோணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள காக்காவாடி, கே.பிச்சம்பட்டி பகுதிகளில் சிமென்ட் சாலை அமைத்தல், மின்கம்பங்களுடன் மின் விளக்கு அமைத்தல், மயானத்துக்கு எரிமேடை அமைத்தல், சிறிய குளம் சீரமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.92.75 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ளன.
இந்த பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதனை சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், காக்காவாடி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் விஜயகுமாா், திமுக பிரமுகா்கள் காக்காவாடி தினேஷ், முன்னாள் வாா்டு உறுப்பினா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.