கிள்ளியூா் பேரூராட்சியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்
கிள்ளியூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கிள்ளியூா் பேரூா் தி.மு.க. சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூா் பேரூா் தி.மு.க செயலா் சத்தியராஜ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் பேரூராட்சி கவுன்சிலா் ராபின்சன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய துணை அமைப்பளா்கள் ஜினோ, ராஜ், ராஜசீலன், ஆல்பன், ரமேஷ், விஜய் உள்ளிட்டபலா் பங்கேற்றனா்.