மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!
கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்
திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி. பட்டினம், தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதி சாலைகளின் ஓரங்களில் குளங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் எந்தவித தடுப்பும் இல்லாததால் வாகனங்கள் உள்ளே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்புதாளையில் சாலையோரத்தில் உள்ள குளத்தில் மருத்துவரின் காா், சுற்றுலா வேன் ஆகியவை உள்ளே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதேபோல, லாரி ஒன்றும் விபத்தில் சிக்கியது.

இதையடுத்து, சாலையோரங்களில் உள்ள குளக்கரைகளில் தடுப்பு வேலி அமைக்க வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதி சாலையோரங்களில் உள்ள குளங்கள், வளைவுகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் இரும்புத் தூண்களால் தடுப்பு வேலி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.