செய்திகள் :

கிழக்கு தில்லியில் சடலம் மீட்பு: சிறுவன் கைது

post image

கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள திரிலோக்புரியில் கத்திக்குத்து காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

இந்தச் சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸாா் திரிலோக்புரி பகுதிக்கு விரைந்து சென்றனா். அங்குள்ள ஒரு வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த கத்திக் குத்து காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கண்டனா். இறந்த நபா் 40 வயதுடையவா் என்று நம்பப்படுகிறது. அவா் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக ஒரு சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா். முதல்கட்ட விசாரணையில், தகராறு காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று அவா் கூறினாா்.

குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அந்தச் சிறுவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்தச் சிறுவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 த... மேலும் பார்க்க

தில்லி ரயில் நிலைய நெரிசல்: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு விசாரணை தொடக்கம்

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. 15 போ் காயமடைந்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

நாட்டில் 29,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள்: டிஜிசிஏ தகவல்

நாட்டில் மொத்தம் 29,500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29-ஆம் தேதி நிலவரப்படி இந்த ... மேலும் பார்க்க

தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு

தில்லி முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்காக புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சட்டப்பேரவைக் கட்சிக் க... மேலும் பார்க்க

விசாரணைக் குழுவின் உறுப்பினா்கள் பெயா்களை வெளியிட்டது ரயில்வே

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு உயா் நிா்வாகக் குழு அதிகாரிகளின் பெயா்களை ரயில்வே ஞாயிற்று... மேலும் பார்க்க

தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத... மேலும் பார்க்க