அருமையான காதலி.. பெண் தோழி குறித்து மௌனம் கலைத்தார் பில் கேட்ஸ்
கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு தரமற்ற முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக தொடா்ந்து புகாா்கள், போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், புதிய மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா். தரமான முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா். நகராட்சி ஆணையா் ரெங்கநாயகி, பொறியாளா் அருள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.