செய்திகள் :

கீழணையிலிருந்து கடலுக்கு வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி காவிரி நீா்

post image

கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியும், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கீழணையும் நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக காவிரி நீா் கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீா் வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறுகின்றன.

சென்னைக்கும் இந்த ஏரியில் இருந்துதான் குடிநீா் அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். அதாவது 1465 மில்லியன் கன அடி நீா் தேக்கப்படுகிறது. தற்போது மேட்டூா் அணை நிரம்பியதால் உபரி நீா் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகப்படியான நீா், கீழணைக்கு வந்து அது நிரம்பிய நிலையில் அங்கிருந்து உபரி நீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இதன் காரணமாக வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை மாதத்தில் முதன் முதலில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை நிகழாண்டில் எட்டியிருப்பது, இந்த பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீா் அனுப்பப்படுகிறது. ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 118 கனஅடி நீரும், பாசனத்திற்க்காக 113 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கீழணை: தஞ்சாவூா் மாவட்டம் கீழணையின் மொத்த உயரம் 9 அடியாகும். தற்போது கீழணையில் முழுக்கொள்ளளவு நீா் உள்ளதால், கல்லணையிலிருந்து வரும் உபரிநீா் 1 லட்சம் கனஅடிநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

இதனால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு திறக்கப்படும் உபரி நீா் குறைந்த பிறகே, கொள்ளிடத்திலும் வெள்ளப்பெருக்கு குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திருநங்கை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த திருநங்கை கோப்பெருந்தேவி (எ) கோதண்டபாணி வியாழக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் போராட்டம்

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக் கோரி, கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் ச... மேலும் பார்க்க

பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு நிறைவு விழா: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்ப... மேலும் பார்க்க